தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? என்பது குறித்து கட்சித் தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டிற்கு குறுகிய காலமே இருப்பதால் உரிய நேரத்தில் நடத்த முடியுமா என சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.