அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான்ல நடைபெற இருக்கிற சாம்பியன்ஸ் கோப்பை தொடர்ல இந்திய அணி பங்கேற்காதுனு சொல்லப்பட்டு வருது. மேலும் வேறு நாடுகள்ல சாம்பியன்ஸ் ட்ராபிய நடத்த்னும்னும் ஐசிசிக்கு இந்தியா கோரிக்கை வைச்சிருக்கிறதாவும் சொல்றாங்க. இந்த நிலையில தற்போது இது குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி , சாம்பியன்ஸ் கோப்பை தொடர்ல விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி நிச்சயம் வரும்னும், அதுல தான் ரொம்பவே நம்பிக்கையா இருக்கிறதாவும் தெரிவிச்சு இருக்காரு.