சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அரசின் அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பாக, கல்வராயன் மலை கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கல்வராயன் மலையில் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.