தென்னிந்தியர்கள் கற்பதற்காக இந்தி பிரச்சார சபா இங்கு ஆரம்பிக்கப்பட்டதுபோல், தமிழை கற்க வட இந்தியாவில் தமிழ் பிரச்சார சபாவை நிறுவ முடிந்ததா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோட்சேயை பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.