கணவன் - மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்னை. பெற்றோர் தலையிட்டும் தீராத சண்டை. மனைவியை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரன். தலைமறைவாக உள்ள கணவனை வலைவீசி தேடும் போலீஸ். மனைவி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்த மனைவிகாலை 10 மணி. தெனாலி பகுதிய சேந்த சாய் என்பவர் பயங்கர கோபத்தோட அவசர அவசரமா தன்னோட பைக்க எடுத்துட்டு மின்னல் வேகத்துல கிளம்பிருக்காரு. இதபாத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சாயோட வீட்ல ஏதோ பிரச்னைன்னு நினைச்சு ஓடிப் போய் பாத்துருக்காங்க. அங்க அவரோட மனைவி கழுத்துல காயங்களோட கொடூரமான முறையில உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சுருக்காங்க. அடுத்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க மூலமா எல்லா விஷயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், கணவன் சாய்ய வலைவீசி தேடிட்டு இருக்காங்க.14 வருடங்களுக்கு முன் நடந்த சாய் - ஷிரீஷா திருமணம்ஆந்திராவுல உள்ள தெனாலி பகுதிய சேந்த சாய் - ஷிரீஷா தம்பதிக்கு 14 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்காங்க. கல்யாணமான புதுசுல இந்த தம்பதி ஹைதராபாத்துல தங்கி மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருந்தாங்க. அங்க சாய் ஒரு கேட்டரிங் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தாரு. ஷிரீஷா பியூட்டி பார்லர்ல வேலை செஞ்சுட்டு இருந்துருக்காங்க. ஷிரீஷா பியூட்டி பார்லர்ல வேலை பாக்குறது சாய்க்கு சுத்தமா பிடிக்கல. இதனால கணவன் மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுட்டு இருந்துருக்கு. இத கேள்விப்பட்டு ரெண்டு பேரோட பெற்றோரும் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திருக்காங்க. அடுத்து இந்த தம்பதி சொந்த கிராமமான தெனாலிக்கே வந்து வசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அங்க வந்ததுக்கு அப்புறமும் ஷிரீஷா கணவனோட சொல்பேச்ச கேட்காம பியூட்டி பார்லர்க்கே வேலைக்கு போய்ருக்காங்க. Related Link இளம்பெண் சடலத்துடன் உடலுறவு கணவனின் பேச்சை கேட்காமல் வேலைக்கு சென்ற மனைவிஅதுமட்டும் இல்லாம வேலைக்கு போய்ட்டு நைட்டு வீடு திரும்புற சாய்க்கு, சாப்பாடு கூட எடுத்து வைக்காம மனைவி யார் கூடயாவது அடிக்கடி ஃபோன் பேசிட்டே இருந்துருக்காங்க. மனைவியோட நடவடிக்கைய பாத்து சந்தேகமடைஞ்ச கணவன், யார் கூட தான் ஃபோன் பேசுவே, வரவர உன்னோட நடவடிக்கையே சரி இல்லை, உன்னோட ஃபோன காட்டு நீ யார் கூட பேசுறன்னு நான் பாக்கனும்ன்னு சொல்லிருக்காரு. அதுக்கு ஷிரீஷா நான் என்னோட ப்ரண்ட்ஸ் கூட தான் பேசுவேன், நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது, தேவையில்லாம என்ன சந்தேகப்படாதிங்கன்னு சொல்லிருக்காங்க. நீ பியூட்டி பார்லருக்கு வேலைக்கு போறது எனக்கு சுத்தமா பிடிக்கல, அந்த வேலைய விட்ரு, அப்ப தான் நமக்குள்ள சண்டை வராம இருக்கும்ன்னு சொல்லிருக்காரு சாய். Related Link மதுவுக்கு அடிமையான கணவனால் சீரழிந்த குடும்பம் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் சாய்அதுக்கு ஷிரீஷா, எனக்கு அந்த வேலை ரொம்ப பிடிச்சுருக்கு, நீங்க சொல்றிங்கன்னு அந்த வேலைய என்னால விடமுடியாதுன்னு சொல்லிருக்காங்க. இதனால கணவன் மனைவிக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. அதுக்கடுத்து மனைவி, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போதெல்லாம் எதுக்கு இவ்ளோ லேட்டா வர்றா? யார் கூட எங்க ஊர் சுத்திட்டு வர்றன்னு கேட்டு சண்டை போட்ருக்காரு சாய். நீ யார் கூடவோ தகாத உறவுல இருக்க, அதான் நீ இப்படி திமிரா இருக்க, அத என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு சொல்லியும் சண்டை போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு சாய் தன்னோட மகன் மற்றும் மகள ஸ்கூலுக்கு அனுப்பி விட்டுட்டு மறுபடியும் மனைவி கூட சண்டை போட்ருக்காரு. அப்ப ஷிரீஷா கணவன பாத்து தகாத வார்த்தையால திட்டுனதா கூறப்படுது.மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன் சாய்இதனால கடும் கோபமான சாய், மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. அடுத்து ஷிரீஷாவோட கழுத்த நெரிச்சு கொடூரமா கொன்னுருக்காரு. அதுக்கடுத்து தன்னோட பைக்க எடுத்துட்டு மின்னல் வேகத்துல கிளம்பிருக்காரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சொன்ன தகவல வச்சு தலைமறைவாக இருக்குற சாய வலை வீசி தேடிட்டு இருக்காங்க. Related Link வேறொரு பெண்ணுடன் ஆசிரியருக்கு லிங்க்