கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவருடைய மகன் கலையரசனுக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து ஷாலினி முதல் இரவு அன்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்,ஷாலினி . இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்றும் , தான் வேரு ஒருவரை காதல் செய்து வந்ததாகவும் கூரிய அவர் உங்ளிடத்தில் வாழவும் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.இதனால் கலையரசன் தனது மனைவி வீட்டில் நடந்ததை சொல்லி அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மீண்டும் அவரது பெற்றோர்கள் இதை பெரிய பிரச்சனையாக எடுத்து கொள்ள வேண்டாம் சில நாட்களில் சரியாகிவிடும் என்று கூறி கலையரசன் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தான் கணவரை முடித்து கட்ட முடிவு செய்த ஷாலினி அவருக்கு கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதில் உடல் நிலை பாதிக்கபட்ட கலையரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலையரசனின் தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.திருமணம் ஆகிய ஒரு மாதத்திற்குள்ளாக கனவணுக்கு கூல்டிரிங்ஸ் -ல் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.