சென்னை நகரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்தது. அண்ணா சாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஜி.எஸ்.டி சாலையில் தேங்கிய மழைநீர்:செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதன் காரணமாக, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது,. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.இரவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான சிறுமுகை, காரமடையில் இரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோன்று, சென்னை பூந்தமல்லி, மதுரவாயல் பகுதி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.