மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் போது திட்டத்தின் பெயரை தமிழாக்கம் செய்யாமல் இந்தி பெயரையே தமிழில் எழுதுவது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பேருந்தில் திருக்குறளை எழுதி வைப்பதால் மட்டுமே தமிழ் வளர்ந்துவிடுமா என வினவியதோடு, அதனை பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.