சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் சமூகவலைத்தளங்களில் பதிவிடவில்லை என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பற்றி பதிவிடுவது தன்னுடைய இதயத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கப் போவதில்லை எனவும், அதை பதிவிடுவதால் தங்களுக்கு 2 கோப்பைகள் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.