இரண்டு அக்னிபாத் வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில், ராணுவத்தில் வீரமரணமடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சரிசமமான இழப்பீடு வழங்கப்படுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு வீரரின் உயிர் இன்னொரு வீரரைவிட மதிப்புமிக்கதாகக் கருதப்படுவது ஏன்? என்பதற்கு பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.