அதிமுகவும், திமுகவும் வேறு வேறு இல்லை என்பதால் தான், விஜய் தலைமையை ஏற்று, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தததாக கூறிய செங்கோட்டையன், 2026ல் விஜய் நல்லாட்சி கொடுப்பார் என்றும் பேசியிருக்கிறார். விஜய்யை சந்தித்தபோது தன் சட்டப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்ததைப் பற்றியும் விளக்கம் அளித்திருக்கிறார். மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காகத் தான் தவெகவில் சேர்ந்ததாகச் சொல்லும் செங்கோட்டையன், தன்னை திமுகவிலிருந்தோ, பாஜகவிலிருந்தோ யாரும் சந்திக்கவில்லை என்றும் கூறி உள்ளார்.