அமலாக்கத்துறை கைது செய்த முக்கிய அரசியல்வாதிகள் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத்துறை இந்தியா முழுவதும் பதிவுசெய்த வழக்குகள்.அமலாக்கத்துறை கைதுசெய்த முக்கிய அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால் முதல் செந்தில்பாலாஜி வரை , அமலாக்கத்துறையின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாததால் வரிசையாக ஜாமீனில் வெளிவந்துள்ளனர். பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைப்புதான் அமலாக்கத்துறை.