இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண வந்த மக்கள் கூட்டத்தை அரசு கவனிக்க தவறியது ஏன் என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது, போதிய ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும் எனவும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதும், உயிரிழப்புகள் நடந்துள்ளதும் வேதனைக்குரியது என கூறியுள்ளார்.