ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு 3 கட்டங்களாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. இதேபோல் 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி ஹரியானாவில் காங்கிரசும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியான நிலையில், யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.