பீகார் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது எதிர்கட்சிகளின் mahagathbandhan கூட்டணியா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கவுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இன்று வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.பீகாரில், வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு, தாக்குதல், அத்துமீறல் என, எது நடந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று, ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் காணொலி வாயிலாக பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.இதையும் பாருங்கள் - Bihar Election Results | "நவீன யுக்தியை பயன்படுத்தும் பாஜக" தலைகீழான கருத்துக்கணிப்பு