சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்திய அணியை வெல்வோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் சவால் விடுத்துள்ளார். பும்ரா போன்ற தரமான பவுலர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை என்றவர், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் 8 டாப் அணிகள் குறிப்பிட்ட வீரரை மட்டுமே சார்ந்திருக்காது என்று கூறினார்.