நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நாகை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.கனமழை பெய்து வரும் நிலையில் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிவகங்கை, கரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.