BE சீரிஸ் எலெக்ட்ரிக் காரை மகிந்திரா நிறுவனம் எப்போது வெளியிட உள்ளதென்ற தகவல் வெளியாகியிருக்கிறது. காரின் தயாரிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கவும், ஜனவரி மாதம் இதனை வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 20 முதல் 80 சதவீதம் வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.