தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்சன்ஸ் அறிவித்துள்ளது.சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்ததால் அவரின் கடைசி படமான ”தளபதி 69” மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.அதோடு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் எச்.வினோத் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.இந்நிலையில் விஜய்யின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.