முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் என்னென்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வந்த பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம், முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.