மது, நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்கின்றனர். லவ் ஃபெயிலியர், பிஸ்னஸ் லாஸ் என்று தொடங்கி, உடம்பு வலி குடிக்கிறேன் என்று கூறிவிட்டு, நகர்ந்து செல்கிறவர்கள் அதிகரித்துள்ளனர். எதுவுமே இல்லை என்றால், சும்மா கூட குடிக்கலாம் என்று கிளம்பி விடுகின்றனர். இப்பொதெல்லாம் ’வீக் என்ட் பார்ட்டி’ தான். இவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். கருவாகி உருவாகி, இந்த உலகில் வரும் போது, இரண்டு கைகளுக்குள் அடங்கி விடும் இந்த உடல், படிப்படியாக வளர்ந்து, ஜாம்பவனாகி விடுகிறது. ஒரு கனெக்சனும் இல்லை, பேட்டரி இல்லை, சார்ஜர் இல்லை. ஆனால், இந்த உடல் இயங்குகிறதே... இந்த உலகை மட்டுமல்ல சர்வ லோகத்தையும் ஆட்டிப் படைக்கிறதே இந்த மூளை... 24X7 என்று துடித்துக் கொண்டே இருக்கிறதே இதயம். இன்னும் எத்தனை எத்தனை சொல்ல.... மனித உடல் உறுப்புகளின் மகிமையை... இந்த உடல் என்னும் தொழிற்சாலை, அற்புத படைப்பு தானே... இதற்குள் மதுவை விட்டால் என்னாகும்? போதை... ராஜ போதை... இது தான் பலருக்கும் தேவை என்று கிளம்பி விடுகின்றனர். மது போதை பிரியர்களை திருத்த, பெரும்பாடு படுவது, முதலில் அவர்களது உடல் தான்.மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சாகா வரம் பெற்றது. இந்த உறுப்புக்களை மது எனும் அரக்கனை அனுப்பி, சம்மட்டியால் அடித்து, மிதி மிதி என்று மிதித்து, ’எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்’ என்று, மதுவை தள்ளிக்கிட்டே இருக்கலாமா?இறப்பு இயற்கையானது தான், ஆறிலும் சாவு நூறிலும் சாவு, ஆனால், மதுவால் சாக வேண்டுமா? மது உள்ளே இறங்கினால், என்ன நடக்கும் தெரியுமா?என்ன செய்யும்? வயிற்றில் சென்று, சிறுநீராக வெளியேறி விடும் என்று தான் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், மது போகிற வழியில், எல்லா உறுப்பையும் பதம் பார்க்கிறது. வயிற்றை தாண்டி, சிறுகுடல், பெருங்குடலுக்கு போகும் மது எனும் ஆல்கஹால், அங்கே ஆல்டிகைடு என்று பிரிகிறது. கல்லீரலுக்கு போகும் போது, அதிகப்படியான பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து ஆல்கஹால் போனால், அட போங்கப்பா என்று கல்லீரல் படுத்தே விடுகிறது. ’நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று துடிக்கிறது கல்லீரல்... Chronic Liver Cirrhosis என்று சொல்லப்படுற நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ்-ங்கிற நிலையானது, சோர்வு, ஆற்றல் இழப்பு, தசை பலவீனம், மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி என்று அறிகுறிகளை காண்பித்து, செயல் இழக்கிறது. எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கும் லிவர், கப்பு கப்புன்னு தொடர்ந்து உள்ள தள்ளும் மதுவால் முடங்கி விடுகிறது. கல்லீரலோட தன்மை எப்படி தெரியுமா? மதுவை கை விட்டு விட்டால், அந்த லிவர் அவ்வளவு சந்தோஷப்படுமாம். மறுபடியும் சுறுசுறுப்பாக தன் கடமையை பார்க்க தொடங்கிடுமாம். அடுத்த கட்ட பாதிப்புக்கு அது போகாதாம். "on status go" என்று போயிட்டே இருக்குமாம்.இது, மனித உறுப்பின் கல்லீரல் குறித்த தகவல் மட்டும் தான். ஆனால், இந்த மது அனைத்து உடல் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு முறை குடிக்கும் மதுவால், சில மணி நேர போதை... ஆனால், ஒரு முறை அருந்தும் மதுவின் பாதிப்பு, தலைமுடியை சோதித்தால் போதும். அந்த பாதிப்பு 90 நாட்களுக்கு இருக்கும். ஒரு ஃபுட்... அது பாய்சன் ஆனால், வாந்தி, பேதி, தலைவலி, மயக்கம் என்று இந்த உடல் எவ்வளவு அறிகுறிகளை காட்டுகிறது. பச்சிளங்குழந்தைக்கு பாதிப்பு என்றால், காய்ச்சல் வரவைத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைக்கிறதே, இந்த உடலை எப்படி பார்க்க வேண்டும்? ”எப்படி வாழ வேண்டும் என்பதற்கு என் எழுத்தைப் பாருங்கள், எப்படி வாழக்கூடாது என்பதற்கு என் வாழ்க்கையை பாருங்கள்,” கவிஞர் கண்ணதாசன் தனது வனவாசம் எனும் சுயசரிதையில் கூறி இருக்கிறார். அந்தக் கால பிரபலத்தில் இருந்து, இந்தக்கால நடிகர் ரோபோ சங்கர் வரை... சொன்னது இது தான்... எப்படி இருந்த நான்... என்று உருக்கத்துடன் கடைசியாக பேசி இருக்கிறார் ரோபோ சங்கர். "நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் போதை வந்தபோது புத்தியில்லையேபுத்தி வந்தபோது நண்பரில்லையே... என்பதுடன், ’இந்த உலகமில்லையே’ என்று மதுப்பிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.