இந்தி தெரியாது போடா என்று கூறும் உதயநிதிக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அம்பேத்கருக்கு எதிராக என்ன செய்தோம் என்பதை தவெக தலைவர் விஜய் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.