நம் உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் முக்கியமானது தான். எல்லாமே ஒவ்வொரு ரகம். மூளை, இதயம், இரைப்பை, நுரையீரல், இப்படி எல்லாவற்றையும் பொறுத்தவரை சின்ன லேசான பாதிப்பு வந்தாலும் உடனே அறிகுறிகளோடு காட்டி கொடுத்து உங்களை எச்சரிக்கை செய்துவிடும். அதையும் மீறி நாம் கவனிக்காமல் போகும் போது தான் பிரச்சனையை கொடுக்கும். ஆனால் சிறுநீரகம் அப்படி இல்லை.. ”நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் டா” என்கிறது போல் கடைசி நேரம் வரை இயங்கி, தன்னால் முடியவில்லை எனும்போது தான் செயலிழந்து போகும்..நேராக விஷயத்துக்கு வருவோம், நம்முடைய சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுதல், திரவங்களை சமநிலைப்படுத்துதல், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது. இப்படி பல வேலைகளை அயராது செய்யும் நம்முடைய சிறுநீரகங்களை நாம் சரியான முறையில் பாதுகாக்கிறோமா என்று பார்த்தால் கேள்விக்குறிதான்..ஆரோக்கியமான உணவைப் சாப்பிடுவது,, அதிகப்படியான சர்க்கரை, அதிகப்படியான உப்பு மற்றும் கொழுப்பைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, தேவையில்லாமல் மருந்து உட்கொள்ளாமல் இருப்பது என பல நல்ல வேலைகளை செய்தால் மட்டும் போதும். இப்படிப்பட்ட அமைதியான குணம் கொண்ட சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் பார்த்து கொள்ளலாம்...