மும்பையில் நடைபெற்ற ஏசியன் கப் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. மும்பை அந்தேரியில், ஏசியன் கப் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆறு நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என்று, மொத்தம் எட்டு பதக்கங்களை பெற்று தமிழக மாணவர்கள் சாதனை புரிந்தனர். போட்டியில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் வந்த வீரர்களுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.