உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்னே ரானாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் உலக கோப்பை தொடரில் முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், வீராங்கனைகளை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய மகளிர் அணியில் விளையாடிய வீராங்கனை ஸ்னே ரானா, தனது சொந்த ஊரான டேராடூனுக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்தும், தோளில் தூக்கியும் ஸ்னே ரானா வருகையை குடும்பத்தினரும், கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர்.