ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராஹி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.