தங்களின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், தான் விரும்பியபடி எதுவும் நடக்காத விரக்தியில், அதனை பேச்சுவார்த்தை மூலம் நடத்த புதின் திட்டமிடுவதாகவும் சாடினார். அத்தோடு, புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன் தாம் டிரம்பை சந்திக்க விரும்புவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.