ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தாம் கூறி வருவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தான் அதிகாரம் இருக்க வேண்டுமே தவிர, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த அதிகாரமும் இருக்க கூடாது என்று கூறினார்.