இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச கூட்டுறவு மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவோம் என நம்புவதாக கூறினார்.