சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என பெயர் சூட்டியது யார்? என வினவியுள்ளார்.