கல்விக்கான நிதியை தரமாட்டோம் என மிரட்டினால் பயப்பட நாங்கள் ஒன்றும் அதிமுக அல்ல என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்றவற்றை புகுத்த மத்திய அரசு துடித்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.