டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான்; ஆனால், என்.டி.ஏ. கூட்டணிக்குள் வந்த பிறகு, தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை மறந்து விட்டதாகவும், தாங்கள் எல்லாரும் அம்மா வளர்த்த பிள்ளைகள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தங்களுக்குள் இருந்தது கூட்டு குடும்ப பிரச்னை என்று கூறிய டிடிவி தினகரன், அண்ணன், தம்பியான தாங்கள் இருவரும் இணைய வேண்டும் என பிரதமர் மோடி விரும்பியதாக தெரிவித்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஏறினர். அப்போது எடப்பாடி பழனிசாமியை பற்றி டிடிவி தினகரனும், டிடிவி தினகரனை பற்றி எடப்பாடி பழனிசாமியும் பேசியது கவனத்தை பெற்றது.இபிஎஸ், தினகரன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு பொதுக் கூட்டம் முடிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டிடிவி தினகரன் பேசுகையில், எதிர்க்கட்சிகள் எங்களின் உட்கட்சி சண்டையை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றால், நாங்கள் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை கொண்டு செல்வோம். எங்களை பொறுத்தவரை கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்கு பிரச்சினை, இது கட்சி பிரச்சினை மட்டுமே.எங்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் வந்து பிரிந்திருந்தது உண்மை. இதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறேன். அமித்ஷா, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே முயற்சி செய்தார்கள். அப்போது முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை ஒட்டி, அமித்ஷா பேசினார். மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கைகோர்த்து விட்டோம். இனிமேல் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒன்றாக பதில் சொல்வோம். இவ்வாறு தினகரன் தெரிவித்தார். மனஸ்தாபம் கிடையாது - இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;வைகோ, எந்த அளவிற்கு திமுகவை விமர்சனம் செய்தார். மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சித்தார். அதையெல்லாம் கேட்க மாட்டீர்களா? மிக மிக மோசமாக பேசிய வைகோ, அதன்பிறகு மு.க.ஸ்டாலின் உடன் கைகோர்த்திருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொள்ளுங்கள். எமர்ஜென்சியை கொண்டு வந்த போது திமுக மிகவும் கடுமையாக எதிர்த்தது. இன்னும் சொல்லப் போனால் அறிவாலயத்தின் மேல் தளத்தில் ரெய்டு நடக்கும் போது, கீழ் தளத்தில் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டனர். டிடிவி உடன் கைகோர்த்த இபிஎஸ் அவர்கள் எல்லாம் கைகோர்த்துக் கொண்டிருக்கும் போது, நாங்கள் ஒன்றாக நிற்பதில் எந்தவித சங்கடமும் இல்லை. ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம். ஊழல் ஆட்சி, வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு ஒன்றாக இணைந்திருக்கிறோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். + Related Link தேச பக்தி குறித்து பாடமெடுக்க வேண்டாம் - முதல்வர்