கோடைக்காலத்தில் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்ககளில் ஒன்றாக இருப்பது தான் தர்பூசணி. அந்த வகையில் பழத்தின் நிறத்தை வைத்தே மக்கள் வாங்கும் நிலை உள்ளதால் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தர்பூசணி பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவல் தொடர்ந்தது .இதனால் ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன், சந்தோஷ் ஆகியோர் தலைமையில் உணவுபாதுகாப்பு துறையினர் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் மற்றும் காவல்நிலையம் முன்பாக டன் கணக்கில் தர்பூசணி பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்ட 3 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 2 தர்பூசணி பழ கடையில் தர்பூசணி பழங்களுக்கு ஊசி மூலம் ரசாயன நிறைமூட்டிகளை செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில் பொதுவாக மக்கள் தர்பூசணி பழங்களை நிறத்தை வைத்துதான் வாங்க ஆர்வம் காட்டுவதால், வியாபரத்திற்காக வியாபாரிகள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் ரித்ரோசின், PONCEAU 4R பவுடர் ஆகியவற்றை ஊசி மூலம் செலுத்தி உள்ளதால் இவை தலைவலி,காய்ச்சலை மட்டுமல்லாமல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.இதனால் பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்ற பழங்கள் மிகவும் ஆபத்து என்று கூறுகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து நிறமூட்டி தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து அவற்றை அழிப்பதுடன் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டோர், ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். இதனால் சாலை ஓரங்களில் விற்கப்படும் தர்பூசணி ஜூஸ்சை தாகம் தணிக்க மக்கள் தர்பூசணியை வாங்குவதற்கு முன்பு தர்பூசணியின் வெளியில் இருக்கும் புள்ளிகளை ஆராய வேண்டும். நீங்கள் சிறந்த தர்பூசணியை தேர்ந்தெடுக்க க்ரீமி - மஞ்சள் அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளை உடைய தர்பூசணியை பார்த்து தேர்ந்தெடுங்கள்.