நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு விழாவில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் மோடி படம் இடம் பெறவில்லை என கூறி, ஈரோடு மக்களவை எம்.பி. பிரகாஷிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் நகரில் மத்திய அரசின் திட்டமான, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்தநிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை எம்.பி. பிரகாஷ் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு சென்ற பாஜக நிர்வாகிகள், பூமி பூஜை போடுவதற்காக அச்சடிக்கப்பட்ட பேனரில் , பிரதமர் மோடி படம் இடம் பெறவில்லை என கூறி வாக்குவாதம் செய்தனர்.