அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சியில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன. வாஷிங்டன் டி.சியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், மக்கள் வழக்கத்திற்கு மாறான கடுங்குளிரையும் எதிர்கொள்கின்றனர். சாலைகளிலும் உறைபனி நிறைந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியாத சூழல் உள்ளது.