கிறிஸ்தவன் என்பதால் தனக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சிக்கும் பாஜகவினர், இது மதச்சார்புள்ள நாடுதான் என ஆளுநர் ஆர்.என்ரவி பேசியதற்கு பதில் கூறட்டும், தான் பதில் தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். குமரி மாவட்டம் கருங்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மூலம் சுமார் 7ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் வந்துள்ளதாக கூறினார்.