வான்கடே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.