பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே பா.ஜ.க. எம்.பி.,க்கள் அனைவரும் இன்று நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்