வக்பு வாரிய திருத்த மசோதா, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. தவறான பிரச்சாரத்தைப் பரப்பி சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜக உத்தியின் ஒரு பகுதியே இந்த மசோதா என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.