பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 121 தொகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ராணுவம் கட்டுப்படுத்தப்படுவதாக ராகுல் சர்ச்சை பேச்சு நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர் ஜாதியினரால்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் குடும்பா என்ற இடத்தில் பேசிய அவர், 90 சதவீதம் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி சமூகங்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு அதிகாரம் மற்றும் வளங்களில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.