பீகார் மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர். ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில் முதல்கட்டத்தேர்தலில் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் துணை ராணுவ வீரர்கள் உள்பட மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு, இன்று மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதையும் பாருங்கள் - Bihar Election | குடும்பத்தினருடன் வாக்களித்த லாலு பிரசாத் யாதவ் | Lalu Prasad Yadav |