டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மொத்தம் 70 தொகுதிகளில் மொத்தம் 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.