மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதே போல் ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.