ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் பயணித்த கார் ஏறி இறங்கியதில் அவரது கட்சி தொண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது கட்சி தொண்டர்களை வேண்டுமென்றே சிறையில் அடைப்பதாக புகார் தெரிவித்து, சிறையில் இருந்து வெளியே வந்த தொண்டர்களை சந்திக்க கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பல்நாடு மாவட்டத்திற்கு ஜெகன்மோகன் சென்றார். அப்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்த நிலையில், அதில் ஒருவர் அவரது காரின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.