இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி விளையாடி வந்த 4வது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பதை கண்டுபிடிக்க குறைந்தது இரண்டு தொடர்களாவது தேவைப்படும் என்று முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்தார். அந்த இடத்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆட வேண்டியது அவசியம் என்றும், அந்த இடத்தை பிடிக்க தற்போது பல வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.