ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக கேட்சுகளை பிடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 2 கேட்சுகளை பிடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் முகமது அசாருதீன் 156 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். இந்த சாதனையை விராட் கோலி தற்போது சமன் செய்துள்ளார்.