இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, மாற்று வீரரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.