ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்ததால் இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இது குறித்து முதல் முறையாக விராட் கோலி மனம் திறந்துள்ளார். வெளிநாட்டு பயணங்களின்போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து மீள குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதை பலரும் உணரவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.