வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு மைதானத்தில் பும்ராவின் பந்துவீச்சை போன்று விராட் கோலியும், ஜடேஜாவும் அவருக்கு முன்னால் செய்து காட்டியது சிரிப்பலையை வரவழைத்தது. கான்பூர் மைதானத்தில் விராட் கோலியும் ரவீந்திர ஜடேஜாவும் செய்த இந்த குறும்பான செயலை கண்டு இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கையுறைகளால் முகத்தை மறைத்தபடி சிரித்தார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.