டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை குவித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்த போது இந்த மைல்கல்லை எட்டினார். இந்த சாதனைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.